#194. வாழ்வே கனவு ஆனால்…

வேலை வெட்டி இல்லாத கணவன் இருந்தான்; 
வேலைக்கு அளிக்கவில்லை உணவு மகனுக்கு. 

அடிப்பார் அடித்தால் அம்மியும் நகருமாம்!
அடிக்கடி மனைவி கூறியபடிச் சென்றான். 

கிடைக்கவில்லை ஒரு வேலையும் அவனுக்கு; 
படுக்கையில் கிடந்த சிறுவன் உயிர் நீத்தான்! 

தேடியும் கிடைக்கவில்லை அவனுக்கு ஒரு வேலை! 
தேடியும் கிடைக்கவில்லை அவன் மரண வேளையில்!

கடிந்து கொண்டாள் மனைவி அக் கல்நெஞ்சனை; 
இடிக்க வில்லை அவனை அவளின் சூடுசொற்கள். 

“அரசனாக வாழ்ந்தேன் அரண்மனையின் நான்; 
அழகிய ஏழு மகன்கள் பிறந்தனர் என் அரசிக்கு; 

விழித்துப்பார்த்தால் எவரையும் காணோம்! 
வீதியில் படுத்து உறங்கி இருக்கின்றேன்! 

இறந்து போன மகனுக்காக நான் அழட்டுமா? 
மறைந்து போன மகன்களுக்காக அழட்டுமா?”

நனவுலகையும் கனவுலகமாகக் கருதுபவருக்கு 
அனவரதமும் சுகம் இல்லை, துக்கமும் இல்லை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#194. When life becomes a dream…

A man was unemployed and unable to feed his wife and son. He never really cared for anything or anyone. His son took to bed.

His wife pestered him to find a job so that they could save the life of their only son. He left the house and went around looking for a job. He found none. 

Meanwhile his son passed away. His wife took great trouble to locate her husband but in vain. When he returned home much later, she took him to task for being so irresponsible as to leave their sick son and going away for such a long period. 

Her harsh words had no effect on him. He shrugged his shoulders and told his wife,
“I was king and enjoyed the pleasures of a royal life. My queen gave me seven beautiful sons. We all lived happily for a very long time.

When I opened my eyes everything was gone…my palace, my queen and my seven sons. I had been sleeping on the side of a street. Tell me now oh dear wife! Should I cry for the one son who died or for those seven sons who just disappeared?”

Those who treat the life on earth as a mere dream and give it no more importance than to a dream are free from all kinds of sorrows.

Design a site like this with WordPress.com
Get started